வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாலே: மாலத்தீவு பார்லிமென்டில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அதிபர் முகமது முய்சு மீது கண்டனம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில், மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் சீன ஆதரவாளர் ஆவர். நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முகமது முய்சு மீது முக்கிய எதிர்க்கட்சியான, மாலத்தீவு ஜனநாயக கட்சி எதிர்கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக நேற்று நடந்த பார்லி., சிறப்பு கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மற்றும் அதன் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.,க்களுக்கும், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சிஎம்.பி.,க்களுக்கும் இடையே வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
இந்நிலையில் அதிபர் முகமது முய்சு சீனாவின் அடிமையாகிவிட்டார். சீன ஆதரவாளராக செயல்படும் அதிபருக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நெருக்கடி தர எதிர்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிபர் முகமது முய்சுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement