இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள கடனை பகுதியளவில் செலுத்துவது தொடர்பான அந்நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கண்டி குட்n~ட் பல்வகைப் போக்குவரத்து வளாகத்தை நிருமாணிக்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அதற்கிணங்க, குறித்த கடன்தொகையில் 37வீதமானவற்றை எதிர்வரும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் செலுத்துவதற்கும், 51 வீதமானவற்றை ஆறு தொடக்கம் இருபது வருடங்களில் திருப்பிச் செலுத்துவதற்கும், மீதமான 12 வீதத்தை இருபது ஆண்டுகளின் பின்னர் வழங்குவதற்கும் அந்நாடுகளுடன் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
கடன் மறுசீரமைப்பின் ஊடாக ஏதேனும் உதவி இலங்கைக்குப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அமைச்சர் அதற்காக மேற்கொள்ளக் கூடிய உச்ச நடவடிக்கைகளை ஜனாதிபதி தலையமையிலான அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையை அபிவிருத்தி செய்யும் நாட்டை நிருவகித்த ஒவ்வொரு அரசாங்கமும் குறைவாகவோ கூடுதலாகவோ கடன் பெற்றுள்ளதாக குறிப்பிட்டட அமைச்சர் வரலாற்றில் எந்த அரசாங்சமும் கடன் பெறாமல் இந்த நாட்டின் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக பெற்றுக்கொண்ட கடன்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன அரசாங்கத்தின் சகல செலவுகளையும் செய்யும் போது கடன் பெறாது அச்செலவுக் தொடர்ந்தும் மேற்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் விபரித்தார்.
2022ஆம் கணக்காய்வாளர் அறிக்கைக்கு இணங்க வருடாந்த வரி வருமானம் 1751 பில்லியன் ரூபா என்றும், 1265 பில்லியன் ரூபா அரசாங்க சேவைகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் ஆகிய செலவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, அது தவிர சமுர்த்தி மற்றும் ஏனைய உதவிகளுக்காக 506 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தினுள் 1567 பில்லியன் ரூபா இதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.