வாஷிங்டன்: அமெரிக்க வீரர்களுக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈராக், சிரியா போன்ற நாடுகளில் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.
பதிலடி தாக்குதல்
இந்நிலையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறி வைத்து, 12க்கும் மேற்பட் இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சக்தி வாய்ந்த குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்க வீரர்களுக்கு தீங்கு செய்தால் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் ஈரான் கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement