சென்னை: மத்திய பாஜக அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் வரும் 8ந்தேதி திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது. தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் வெள்ளத்துக்கு ரூ.37 ஆயிரம் கோடி தரவேண்டும் என்ற கோரிக்கை […]
