புதுடெல்லி: விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணி இரண்டாவது நாளை எட்டி உள்ள நிலையில், போராட்டக் களம் புதன்கிழமை விவசாயிகளின் நூதன யுக்தி ஒன்றுக்குச் சாட்சியானது. அரசு தங்களுக்கு எதிராக ஏவி விடும் கண்ணீர் புகை குண்டுகளை சுமந்து வரும் ட்ரோன்களுக்கு பதிலடியாக பட்டங்களைப் பறக்க விட்டு விவசாயிகள் செயலிழக்கச் செய்தனர்.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குவது, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துவது, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி போவதில் பஞ்சாப் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதற்காக நேற்று டெல்லி நோக்கி பேரணி தொடங்கினர். அவர்களின் பேரணியை பஞ்சாப் – ஹரியாணா எல்லையின் ஹரியாணா போலீஸார் தடுத்தனர். இதற்காக சிமென்ட் தடுப்புகள், முள் வேலிகள், அமைத்து, போலீஸார், துணை ராணுவத்தினரை நிலை நிறுத்தியிருந்தனர்.