இந்திய சந்தையில் தொடர்ந்து பிரீமியம் பைக்குகளை வெளியிட்டு வரும் கவாஸாகி அடுத்த டீசரை வெளியிட்டதன் மூலம் நின்ஜா 500 ஸ்போர்ட்ஸ் பைக்கின் வருகையை உறுதி செய்துள்ள நிலையில் அனைத்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். EICMA 2023 அரங்கில் வந்த நின்ஜா 500 மற்றும் Z500 மாடலில் 451cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 45.4hp பவர் 9000rpm-லும் 42.6Nm டார்க் ஆனது 6000rpm-ல் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. […]
