மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் நேற்று தொடங்கியது. ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 2,000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
