வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் நடத்தி ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் ஜூன் மாத்திற்குள் நிலத்தை விட்டு வெளியே உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
டில்லி உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் இணைப்பாக, நீதிபதிகள் குடியிருப்பு, உயர் அலுவலர்கள் குடியிருப்பு ஆகியவற்றிற்கான கட்டடம் கட்டுவதற்காக டில்லி ரோஸ் அவென்யூ, தீன்தயாள் உபாத்யாயா மார்க் என்ற பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சட்டத்திற்கு புறம்பாக உயர்நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் இயங்கி வருவதாக வழக்கு தொடரப்பட்டது.
இதில் டில்லி நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிலம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில், உயர்நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆம் ஆத்மி கட்சி ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டது.
இருதரப்பு வாதத்தை கேட்ட தலமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் நீதிபதிகள் பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அனுபவிக்க சட்டபூர்வ உரிமை இல்லை. ஆக்கிரமித்துள்ளதை ஏற்க முடியாது, வரும் வரும் லோக்சபா தேர்தல் முடிந்ததும் அல்லது ஜூன் இறுதிக்குள் தேதிக்குள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும். டில்லி நில மேம்பாட்டு அலுவலத்திடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement