வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: உலகின் பணக்காரர் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்கை முந்தி அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
2021ம் ஆண்டு உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் இருந்தார். 2023ம் ஆண்டு அவரை முந்தி எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார். தற்போதும் அவரே முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஜெப் பெஜோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் 198 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
197 பில்லியன் டாலர் சொத்துகளுடன் ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் லூயி வுய்டன் நிறுவனத்தின் சிஇஓ பெர்னார்ட் அர்னால்ட் 3வது இடத்திலும்
179 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மெடா சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க் 4வது இடத்திலும்,
150 பில்லியன் டாலர் சொத்துகளுடன் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 115 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 11வது இடத்திலும், அதானி குழும தலைவர் அதானி 104 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 12வது இடத்திலும் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement