ரூ.41 லட்சத்தில் BYD சீல் விற்பனைக்கு வெளியானது

61.44kWh மற்றும் 82.56kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ள BYD சீல் எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பிஓய்டி சீல் முக்கிய விபரம்;

  • துவக்க நிலை 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும்.
  • RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 650 கிமீ (NEDC cycle) ஆகும்.
  • AWD இரு அச்சிலும் தலா ஒரு மோட்டாரை பெற்று 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது.
  •  0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டுள்ளது.
  • முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 700 கிமீ (CLTC)
  • Seal காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.
  • 150kW விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற ‘Blade Battery’ டெக்னாலஜி பெறுகின்றது.

BYD நிறுவனம் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வாரண்டியையும், மோட்டார் மற்றும் மோட்டார் கன்ட்ரோலருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,50,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது.

Variant Ex-showroom price
Dynamic 61.44kWh Rs. 41,00,000
Premium 82.56kWh Rs. 45,55,000
Performance 82.56kWh AWD Rs. 53,00,000

The post ரூ.41 லட்சத்தில் BYD சீல் விற்பனைக்கு வெளியானது appeared first on Automobile Tamilan.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.