குற்றங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் – அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன

நாட்டில் இடம்பெறும் குற்றங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என அஅமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவைக் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது ஊடகவியளாலர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பாரிய அளவில் புதிதாக உறுதி செய்வதாகவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற நேமிகளை சந்தித்த அப்பாவி மக்களுக்கும் பயம் மற்றும் சந்தேகம் இன்றி வீடுகளில் வாழ முடியாதவாறு கதைகள் கட்டப்படுவதாகவு அவர் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக போதைவஸ்துக்கு அடிமையான வீடுகளிலும் கூட நுழைந்துள்ளபல்வேறு திருட்டுகள், அச்சுறுத்தல், கப்பம், கடத்தல் போன்றவை இடம்பெற்றமை யாவரும் அறிந்த விடயம் என நினைவுபடுத்திய அமைச்சர், அதனால் பாதுகாப்பு அமைச்சு தனியான தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அதனால் பாரியளவில் அவ்வாறானவர்களை கைது செய்தல் மற்றும் போதைவஸ்து தேடுதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் துப்பாக்கிச்சூட்டுகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் விபரித்தார்.

அவ்வாறே வன்முறைகளை மேற்கொள்வது யாராக இருந்தாலும் அல்லது இடம்பெறுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் தலையிடுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் வலியுறுத்தினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.