சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள உறுப்பினர்களுக்கான நேர்காணல், வரும் மார்ச் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள உறுப்பினர்களுக்கான நேர்காணல் எம்ஜிஆர் மாளிகையில், மார்ச் 10 ஞாயிற்றுக் கிழமை, மார்ச் 11 – திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.