தர்மசாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். இந்திய அணி தற்போது முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 4 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தர்மசாலாவில் 5வது டெஸ்ட் போட்டி நேற்று (மார்ச் 7) துவங்கியது. ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். பிறகு முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் (57) ஆட்டமிழக்க, முதல் நாள் முடிவில் ஒரு விக்., இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2ம் நாள் ஆட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். உணவு இடைவெளி வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்து, 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. ரோகித் (102), சுப்மன் கில் (100) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement