Asif Ali Zardari elected as President of Pakistan | பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவு பெற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் வேட்பாளர்களாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் முகமது கான் என்பவரும் போட்டியிட்டனர். தேசியசபையில் நடந்த வாக்கெடுப்பில் ஆசிப் அலி ஜர்தாரிக்கு 255 வாக்குகளும், முகமது கானுக்கு 119 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து ஆசிப் அலி ஜர்தாரி பாகிஸ்தானின் 14-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.