Childs post-mortem has affected doctors minds | சிறுமியின் பிரேத பரிசோதனை டாக்டர்கள் மனதை பாதித்துள்ளது

புதுச்சேரி:புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. சிறுமி உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டதாக ஆணைய குழுவினர் தெரிவித்தனர்.

அதிர்வலை

புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அதே பகுதி கருணாஸ், 19, விவேகானந்தன், 57, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஐ.பி.எஸ்., அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிறுமி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்கிறதா என்பதை ஆய்வு செய்ய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேற்று புதுச்சேரி வந்தது.

கடும் தண்டனை

ஆணைய சென்னை பிரிவு மண்டல இயக்குனர் ரவிவர்மா தலைமையில், ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் அடங்கிய குழுவினர், பிரேத பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்களிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை, டி.என்.ஏ., பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் வந்த குழுவினர், வழக்குப்பதிவு செய்த எஸ்.பி., லட்சுமி சவுஜன்யாவிடம் சிறுமி மாயமான 2ம் தேதி முதல் இறப்பு வரை நடந்த விசாரணைகள் குறித்து கேட்டறிந்தனர்.

சிறுமியின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என, உறுதி அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.