Manufacturing Semiconductor Chips in 2026; Tata Company is the target | 2026ல் செமி கண்டக்டர் சிப்கள் உற்பத்தி: டாடா நிறுவனம் இலக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: குஜராத் மற்றும் அசாமில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 2026ம் ஆண்டு முதல் செமிகண்டக்டர் ‛சிப்’கள் உற்பத்தி செய்யப்படும் என டாடா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

மும்பையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: செமி கண்டக்டர்கள் ‛ சிப் ‘ உற்பத்தி செய்வதற்கான கெடுவை துரிதப்படுத்தி உள்ளோம். விரிவுபடுத்தி உள்ளோம். 2026ல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அசாம் தொழிற்சாலையில் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே ‛சிப்’ உற்பத்தியாகும். 2025 பிற்பகுதி அல்லது 2026 முன்பகுதியில் வணிக ரீதியிலான செமி கண்டக்டர் ‛ சிப் ‘ உற்பத்தி துவங்கும். குஜராத்திலும் ‛சிப்’ உற்பத்தி துவங்கும்.

இதன் மூலம் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இது ஆரம்பம் தான். இந்தியாவில் ‛சிப்’களின் பிரச்னை தீர்வுக்கு வரும். இவ்வாறு நடராஜன் சந்திரசேகரன் கூறினார்.

செமி கண்டக்டர் ‛ சிப்’ உற்பத்தி செய்ய டாடா நிறுவனம் குஜராத்தில் 2, அசாமில் 1 தொழிற்சாலை அமைத்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.