அடுத்த மாதம் காதலியை மணக்கிறார் பாலா

கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்று வரும் இவர் ஏழை, எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சமூகபணிகள் பலவும் செய்து வருகிறார். அதோடு சென்னை மழை வெள்ளத்தின்போது கூட பலருக்கு தேடிச் சென்று உதவி செய்தார்.

இந்தநிலையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாலா, புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசியவர், ‛‛குழந்தைகளுக்கு குட் டச்- பேட் டச் என்று சொல்லிக் கொடுப்பதை விட்டுவிட்டு, டோன்ட் டச் என்று சொல்லிக் கொடுங்கள். அதுதான் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழியாகும்'' என்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அடுத்த மாதத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். என்றாலும் தனது காதலி யார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. இப்படி அவர் திருமண செய்தியை வெளியிட்டதை அடுத்து பலரும் அவருக்கு சோசியல் மீடியா பக்கத்தில் அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.