எலக்ட்ரிக் வாகன இறக்குமதிக்கு 15 % வரி சலுகை அறிவிப்பு

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மின்சார கார்களுக்கு 15 % வரை வரி சலுகை குறிப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதி வழங்கி இந்திய அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் டெஸ்லா, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையும் மேலும் ஃபோர்டு இந்தியா புதிய முதலீடு திட்டங்களை அறிவிக்கும் பட்சத்தில் இந்நிறுவனமும் பயன் பெறலாம்.

முக்கிய நிபந்தனைகள்

  • உள்ளூர் உற்பத்தி திறனை அதிகரிக்க அடுத்த 3 ஆண்டுகளுக்குள் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,150 கோடி அல்லது 500 மில்லியன் டாலருக்கான முதலீடு திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும்.
  • அதிகபட்ச முதலீடு தொடர்பான வரம்பு இல்லை.
  •  3 வருடத்துக்குள் உற்பத்தியாளர் இந்தியாவில் தொழினற்சாலையை நிறுவினால், செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பு USD 35,000 (ரூ. 29 லட்சத்திற்கு மேல்) உள்ள வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சுங்க வரியாக (CKD களுக்கு பொருந்தும்) 15 சதவீதம் விதிக்கப்படும்.
  • ஆனால் 4 வது வருடத்தில் 25 % பாகங்கள் உள்நாட்டிலும், 5 ஆம் வருடத்தில் 50 % உதிரிபாகங்கள் உள்நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டால் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு வரி சலுகை கிடைக்கும்.
  • இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மின் வாகனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரி, முதலீடு செய்யப்பட்ட முதலீடு அல்லது ரூ. 6,484 கோடி (பிஎல்ஐ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு சமமாகும்) ஆகியவற்றில் எது குறைவாக இருந்தாலும் அது வரையறுக்கப்படும்.
  • 800 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 66,000 கோடிக்கு மேல்) அல்லது அதற்கு மேல் முதலீடு செய்தால், அதிகபட்சமாக 40,000 EVகளை அல்லது வருடத்திற்கு 8,000 வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

இந்த முக்கிய நிபந்தனைகளை பின்பற்றி இந்திய சந்தையில் மின்சார கார் தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களை இந்திய சந்தைக்கு கொண்டு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வரி சலுகை தொடர்பாக டெஸ்லா தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் டெஸ்லாவின் இந்திய ஆலை குறித்தான தகவல் விரைவில் வெளியாகலாம்.

தொடர்ந்து படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.