சென்னை: நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அரசு திட்டங்களின் பயன்கள் உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேர்வதை, பயனாளிகளிடம் கேட்டு அறிந்து கொள்ளும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 6ந்தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மக்களுடன் […]
