தேர்தல் தொடர்பான புகார்களுக்கான தொலைப்பேசி எண்கள் வெளியீடு

சென்னை தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவியாகத் தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.   நேற்று நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி அன்று இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்படுகின்றன.   தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வருமான வரித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , ”நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்தியேகமாகச் செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களைத் தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டணம் இல்லா தொலைப்பேசி எண் / மின்னஞ்சல்/ புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம். தகவலைப் பகிர்ந்துகொள்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கட்டணம் இல்லா தொலைப்பேசி எண் – 1800 425 6669, மின்னஞ்சல் : [email protected] வாட்ஸ்ஆப் – 94453 94453 “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.