பிரதமர் மோடி வருகை: கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, கோவையில் இன்று (மார்ச் 18) மதியம் 2 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து, மாநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனரக வாகனங்கள் இன்று காலை 6 மணிமுதல் நாளை ( மார்ச் 19 ) காலை 11 மணிவரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

அவிநாசி சாலை: அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு,மேட்டுப்பாளையம் ரோடு, காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.


இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவிநாசி சாலை எஸ்என்ஆர் சந்திப்பு வழியாக100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு, புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிர்க்க வேண்டும்.

திருச்சி சாலை: திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் ராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், பாலிடெக்னிக் சந்திப்பு, ஆவாரம்பாளையம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என்.ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சத்தி சாலை: சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் ராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம் சாலை: மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது கவுண்டர் மில் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி கேஎன்ஜி புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம் பாளையம் மேம் பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம். மேட்டுப் பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்ல வேண்டும். காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடது புறம் திரும்பி மணியகாரம் பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.

மருதமலை, வட வள்ளி சாலை: மருதமலை, வட வள்ளி பகுதியிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி பார்க், தெலுங்கு வீதி, ராஜ வீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம். மருதமலை வட வள்ளி பகுதியிலிருந்து மேட்டுப் பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி ஜிசிடி சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

உக்கடம்: உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்கார வீதி, பூ மார்க்கெட், சிந்தாமணி, டி.பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, செல்வ புரம் உயர்நிலைப் பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராம மூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டி வீதி, சலீ வன் வீதி, காந்தி பார்க் சந்திப்பில் இடது புறம் திரும்பி லாலி ரோடு சந்திப்பு, ஜிசிடி சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர் பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். போக்கு வரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.