தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழுவின் சிறப்புக் கூட்டம் சேலம் மரவனேரி ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆடிட்டர் சங்கர ராமநாதன், பொருளாளர் ஜெயராமன், சேலம் மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, சங்க நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியை, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கச் செய்திட, தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். உள்ளூர் பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல், தேசிய கண்ணோட்டத்தில் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.