Jaki Vasudev undergoes brain surgery: He is on the mend | ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை: உடல்நலம் தேறி வருகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவிற்கு மூளை அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதையடுத்து டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளையில் லேசான ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தப்பட்டதால் கடந்த 17-ம் தேதி மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சத்குரு உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டு, சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன..

இதற்கிடையே அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.