ரெபல் (Rebel) – தமிழ்

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜீ.வி. பிரகாஷ், கேரளாவில் கல்லூரி படிப்பைப் படிக்கிறார். அங்கு அவருக்கு மலையாள பெண் மீது காதல் வர, அதோடு சேர்த்து மலையாள கேங்கிடம் சண்டையும் வருகிறது. அது அரசியல் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. தமிழ் – மலையாள கேங் என மோதிக்கும் இவர்களின் சண்டை என்ன ஆனது, ஜீ.வி.யின் காதல் என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம். காதல், ஆக்ஷன் திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் மார்ச் 22ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.
Anchakkallakokkan (மலையாளம்)

உல்லாஸ் செம்பன் இயக்கத்தில் லுக்மான் அவரன், செம்பன் வினோத், ஸ்ரீஜித் ரவி, மேகா தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் ‘Anchakkallakokkan’. க்ரைம், ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது கடந்த வாரம் கேரளாவில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மார்ச் 22ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.
Om Bheem Bush (தெலுங்கு)

ஸ்ரீ ஹர்ஷா கோனுகண்டி இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு, பிரியதர்ஷி புலிகொண்டா, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Om Bheem Bush’. காமெடி திரைப்படமான இது மார்ச் 22ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Swatantrya Veer Savarkar (இந்தி/ மராத்தி)

சாவர்க்கரின் வாழ்க்கையத் தழுவி எடுக்கப்பட்டுள்ளத் திரைப்படம் ‘Swatantrya Veer Savarkar’. இப்படத்தை ரன்தீப் ஹூடா இயக்கி நடித்திருக்கிறார். இத்திரைப்படம் மார்ச் 22ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Arthur The King (ஆங்கிலம்)

சைமன் செல்லன் ஜோன்ஸ் இயக்கத்தில் மார்க் வால்ல்பெர்க், சிமி, நதாலி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Arthur The King’. சைக்கிள் சாகசங்கள் செய்யும் கதாநாயகனுக்கும், அவரது வளர்ப்பு நாய்க்குமான உறவை அழகாகச் சொல்லும் படம். இத்திரைப்படம் மார்ச் 22ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Imaginary (ஆங்கிலம்)

ஜெஃப் வாட்லோ இயக்கத்தில் டிவண்டா வைஸ், டாம் பெய்ன், பைபர் பிரவுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Imaginary’. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 22ம் தேதி (இன்று) திரையங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Ae Watan Mere Watan (இந்தி) – Amazon Prime Video

கண்ணன் ஐயர் இயக்கத்தில் சாரா அலி கான், அலெக்ஸ் ஓ’னெல், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ae Watan Mere Watan’. சுதந்திரப் போராட்டாத்தின் போது ரேடியோ மூலம் மக்களின் போராட்டா உணர்வை எழுச் செய்த பெண்ணின் கதை இது. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Road House (ஆங்கிலம்) – Amazon Prime Video

டக் லிமன் இயக்கத்தில் ஜேக் கில்லென்ஹால், டேனிலா மெல்ச்சியர், கோனார் மெக்ரிகோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Road House’. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 21ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ளது.
Shirley (ஆங்கிலம்) – Netflix

ஜான் ரிட்லி இயக்கத்தில் ரெஜினா கிங், லான்ஸ் ரெட்டிக், டெரன்ஸ் ஹோவர்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Shirley’. அமெரிக்க காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண் அரசியல் தலைவரான ஷெர்லி அனிடா சிஷோல்மினின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘Shirley’.
இந்த வார வெப்சீர்யஸ்கள்…
Palm Royale (ஆங்கிலம்) – Apple Tv+

அபே சில்வியா இயக்கத்தில் கிறிஸ்டன் வீக், ரிக்கி மார்ட்டின், ஜோஷ் லூகாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Palm Royale’. தன் வேலையைத் தக்க வைத்துக்கொண்டு தனது லட்சியத்தை நோக்கிப் பயணும் பெண்ணின் கதை இது. இந்த வெப்சீரிஸ் ‘Apple Tv+’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
X-Men ’97 (ஆங்கிலம்) – Disney + Hotstar

பியூ டிமேயோ, ஸ்டான் லீ, ஜாக் கிர்பி ஆகியோரது உருவாக்கத்தில் வெளியாகியுள்ள வெப்சீரிஸ் ‘X-Men ’97’. அனிமேஷன், அட்வென்சர் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
3 Body Problem (ஆங்கிலம்) – Netflix

டேவிட் பெனியோஃப், டி.பி. வெயிஸ், அலெக்சாண்டர் வூ உள்ளிடோர் இயக்கத்தில் ஜோவன் அடெப்போ, லியாம் கன்னிங்ஹாம், ஈசா கோன்சாலஸ் உள்ளிட்டோர் நடிப்பி உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘3 Body Problem’. ஆக்ஷன், அட்வன்சர், ஃபேன்டஸி வெப்சீரியஸான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Lootere (இந்தி) – Disney + Hotstar

ஹன்சல் மேத்தா, ஷைலேஷ் ஆர் சிங் இயக்கத்தில் தீபக் திஜோரி, மார்ஷியல் பேட்ச்மேன் தச்சானா, அவனிஷ் பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Lootere’. கடல் சாகசங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Davey & Jonesie’s Locker (ஆங்கிலம்) – Amazon Prime Video

எவானி ரோசன் இயக்கத்தில் வெரோனிகா ஸ்லோவிகோவ்ஸ்கா, எரிகா ஸ்வேஸ், சிட்னி டாப்லிஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Davey & Jonesie’s Locker’. பள்ளிப் பருவ நண்பர்களின் கலாட்டாக்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
மறக்குமா நெஞ்சம் (தமிழ்) – Amazon Prime Video

ராகோ.யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன், தீனா, மலினா, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், ஸ்வேதா வேணுகோபால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மறக்குமா நெஞ்சம்’.
பத்து ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்புப் படித்தவர்கள் எழுதிய தேர்வில் நடந்த சில குளறுபடிகளால் மீண்டும் அதே பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சூழல் ஏற்படுகிறது. அப்படி மீண்டும் இணைந்து படிக்கும் அலுமினிகளின் அலப்பறைகளும், நாஸ்டாலஜிக்கானத் தருணங்களும்தான் இதன் கதை. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Oppenheimer (ஆங்கிலம்) – Jio Cinema

`இன்டர்ஸ்டெல்லார்’, `இன்செப்ஷன்’, `தி டார்க் நைட் டிரைலாஜி’, `தி பிரஸ்டீஜ்’ போன்ற பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை எடுத்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. சமீபத்தில் 7 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இத்திரைப்படம் ஆங்கிலம், இந்தி உள்ளிட மொழிகளில் ‘Jio Cinemas’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைகளமாக வைத்து எடுக்கப்பட்டது இப்படம். இதில் அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் கிலியன் மர்பி நடிக்கிறார். இதுதவிர ‘அயர்ன்மேன்’ புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
Abraham Ozler (மலையாளம்) – Disney + Hotstar

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியிருக்கும் ‘அப்ரஹாம் ஒஸ்லெர்’ திரைப்படத்தில் ஜெயராம், அர்ஜுன் அசோகன், அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Bhoothaddam Bhaskar Narayana (தெலுங்கு) – aha

புருஷோத்தம் ராஜ் இயக்கத்தில் சிவ கந்துகுரி, ராசி சிங் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhoothaddam Bhaskar Narayana’. ஒரு பெரிய க்ரைமுக்குப் பின்னாலிருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கப் கதாநாயகன் போராடுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Fighter (இந்தி) – Netflix

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.