பிறந்தநாளன்று மகாலெட்சுமி செய்த உருக்கமான காரியம்

சின்னத்திரை நடிகை மகாலெட்சுமி, சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதுமுதலே சோஷியல் மீடியாக்களில் இருவரும் கவனம் ஈர்த்து வைரல் ஜோடியாக டிரெண்டாகி வருகின்றனர்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள மகாலெட்சுமி மாற்றுத்திறனாளிகள் ஆசிரமத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து மகிழ்வித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாய் தனது உடலுறுப்புகளை தானம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரம்பி உள்ளது. முதலில் எனது கணவர் நள்ளிரவில் கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினார். அவரை எனது வாழ்க்கை துணையாக அடைந்ததை அதிர்ஷடமாக கருதுகிறேன். எனது மகனும் எனக்கு கேக் தந்து ஆச்சர்யப்படுத்தினான். என்னைச் சுற்றி அழகான ஆன்மாக்கள் இருப்பதால் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உள்ளேன்'' என பதிவிட்டுள்ளார்.

மகாலெட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ரசிகர்கள் அவரின் உடலுறுப்பு தானத்தையும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.