கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைமீதுள்ள சிவன்கோவிலுக்கு சென்று சுவாதி தரிசனம் செய்ய முயற்சிக்கும் பல பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24மணி நேரத்தில் மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறியபோது தெலுங்கானா மாநலிம் ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (57) என்ற மருத்துவர், மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் வெள்ளியங்கிரியின் முதல்மலையான குரங்குபாலம் அருகே […]
