T20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா பயணம்

தென்னாபிரிக்காவில் இடம்பெறும் T20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை மகளிர் அணியினர் கடந்த 23ஆம் திகதி தென் ஆபிரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர்.

சமரி அத்தபத்து தலைமையிலான இந்த அணியில் 17 வீராங்கணைகள் உள்ளனர். தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணிக்கு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது அனுமதியை வழங்கினார்.

இந்த போட்டியில் மூன்றுT20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கும். இங்கு நடைபெறும் ஒரு நாள் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் மகளிர் ஒரு நாள் போட்டியாகும்.

தென்னாப்பிரிக்கா நோக்கி பயணமான 17 வீரர்கள் கொண்ட அணி –

சமரி அத்தபத்து (தலைவர்) விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவீஷா தில்ஹாரி, ஹஷினி பெரேரா, அவிஷ்கா சஞ்சீவனி, ஓஷதி ரணசிங்க, உதேஷிகா பிரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரத்ன, இமேஷா துலானி, காவ்யா கவிந்தி, இரோஷி பெர்னான்டோ, சுகந்திகா குமாரி மற்றும் பிரசாந்தினி வீரக்கொடி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.