தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிமுக கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டதில் தலைமை வகித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, “தேனி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழகத் தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும்.
கட்சியினர் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும், சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால்தான் தற்போது அமைச்சர் பதவிக்கு உயர்ந்துள்ளேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியைத் தவிர்த்து 39-ல் வெற்றி பெற்றோம். அத்தோல்விக்கு சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் குறைவான வாக்குகள் பெற்றதே காரணம். அந்த வருத்தம் முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் இன்றும் உள்ளது.
இங்கு கட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு பொறுப்பில்லை. கட்சியினரை நேரில் சந்திக்காமல் போனில் பேசி அரசியல் செய்தால் எப்படி உருப்படும்? என் பேச்சு, நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். அதற்கு வாய்ப்பு தராதீர்கள்.

இப்போது கூட வேதனையுடன் பேசுகிறேன். இந்த கூட்டத்துக்கு வருவதாக சொன்ன வாகனங்கள், ஆட்கள் எங்கே? இன்று நடந்தது அனைத்தும் துரோகம். இது எங்களுக்கு செய்யும் துரோகம் அல்ல. உங்களை கட்சியில் ஆளாக்கிய முதல்வருக்கு செய்யும் துரோகம்.
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெறாவிட்டால், மறுநாளே மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவியை ராஜினமா செய்து விடுவேன்” என்று ஆவேசமாக பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY