மதுரை: வாரிசு அரசியல் என்பது என்ன என்று, மதுரை தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் தெரிவித்து உள்ளார். மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் வாரி அரசியல் குறித்து சரமாரியாக விமர்சனம் செய்தார். மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தி.மு.க. […]
