நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிருக்கும் பதிவுகள்…
நடிகர் ரஜினிகாந்த்:
“என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”.
என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி
— Rajinikanth (@rajinikanth) November 10, 2024
த.வெ.க தலைவர் விஜய்:
“மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”.
மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்…
— TVK Vijay (@tvkvijayhq) November 10, 2024
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை:
“தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!”
தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரு. டெல்லி கணேஷ்… pic.twitter.com/GBBRqtA3vD
— K.Annamalai (@annamalai_k) November 10, 2024
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்:
“தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.
தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார்.
இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..!”
தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான திரு.டெல்லி கணேஷ் அவர்கள், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.
தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட… pic.twitter.com/7AnnqJQ7dF
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 10, 2024
நடிகர் மாதவன்:
“அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான ஆன்மா சொர்க்கத்தை மகிழ்விக்க சென்றிருக்கிறது. உங்களை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்வோம் சார்.”
A phenomenal actor and an amazing soul departs for the heavens to entertain them. You will be so sorely missed, sir.. Rest in peace for eternity. #DelhiGanesh pic.twitter.com/mC4aqGQ2NA
— Ranganathan Madhavan (@ActorMadhavan) November 10, 2024
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்:
“டெல்லிகணேஷ் சார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. நல்ல நடிகர்களில் ஒருவர்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”.
Extremely sad to hear the passing of #DelhiGanesh Sir. One of the most versatile actors ever.
Heartfelt condolences to his family.
May his soul rest in peace. pic.twitter.com/xc3Tmbm4Oi
— karthik subbaraj (@karthiksubbaraj) November 10, 2024