சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் “உலகப்பற்று” எனப்படும் ஆசையையும் குறிக்கும். “இது உனக்குச் சொந்தமானதல்ல; எனக்குச் சொந்தம்” என்று […]
