சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் டைட்டில் வெளியிடப்படுகிறது. ஏதோ ஒரு துறையில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. அவ்வரிசையில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற பெயரில் மாதவன் இயக்கி நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை […]
