நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகள் தோல்வியை தழுவி உள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இப்படி மோசமாக விளையாடியது இல்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு பதிலாக தோனி அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அப்படி கடந்த போட்டி முதல் தோனி அணியை வழிநடத்த தொடங்கி உள்ளார். அவரது கேப்டன்சியில் சென்னை அணி தோல்வியில் இருந்து மீளும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த போட்டியிலும் சென்னை அணி படுதோல்வியை தழுவியது. இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சென்னை அணியை கடுமையாக சாடி இருக்கிறார். அவர் பேசுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இத்தனை தோல்விகளை சந்தித்த பிறகும் அவர்களது திட்டமிடலை மாற்றி அமைக்கவில்லை. அவர்கள அதனை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் ஒரு சில விஷயங்கள் எனது புரிதலுக்கு அப்பாற்பட்டு உள்ளது. கொல்கத்தா போட்டியில் அஷ்வின் பந்து வீசும்போது, இடது கை பேட்டர்களுக்கு ஓவர் தி ஸ்டம்பில் இருந்து வீசினார்.
ஆனால் அவர் வழக்கமாக அரவுண்ட் தி ஸ்டம்பில் இருந்து பந்து வீசுவார். அவர் ஓவர் தி ஸ்டம்பில் இருந்து வீசுவது நரைனுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இதெல்லாம சிறிய விஷயங்கள். இத்தனை அனுபவம் வாய்ந்த வீரராக அஷ்வினும் விக்கெட் கீப்பர் தோனியும் உள்ளார்கள். அப்படி இருந்தும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கிறது. அவர்களது மூளை வேலை செய்வது நின்று விட்டதா? என மனோஜ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6ல் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், வரும் போட்டிகளில் அனைத்தையும் வெற்றி பெற வேண்டும்.
மேலும் படிங்க: CSK: சிஎஸ்கேவில் 4 அதிரடி மாற்றங்கள்! அணிக்குள் வரும் இளம் வீரர்கள்!
மேலும் படிங்க: ரோஹித் சர்மா இடத்தில் விளையாடப்போகும் 3 வீரர்கள்! யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?