Toll gate: இனி FASTag பதிலாக GPS தொழில்நுட்பம்.. மக்களுக்கு பயனளிக்குமா?

நெடுஞ்சாலையில் சுங்க கட்டணத்தை வசூலிக்கும் தற்போது உள்ள ஃபாஸ்ட் டேக் முறைக்கு மாற்றாக புதிய சேட்டிலைட் தொழில்நுட்பத்தை (GPS) அறிமுகப்படுத்தவுள்ளது இந்திய அரசு.

மணிக்கணக்காக டோல்களில் வரிசையில் நிற்க வேண்டி இருக்கும் பழைய கட்டண வசூலித்தல் முறைக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தான் ஃபாஸ்ட் டேக். ஆனால், இதிலும் பிரச்னைகள் இருக்கவே புதிதாக தொழில்நுட்பத்தில் இன்னும் ஒருபடி மேலாக சென்று GNSS- குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் என்கிற திட்டம் வரவிருக்கிறது.

Highway Toll Gate

ஏப்ரல் 1 முதல் அறிமுகமாகவிருந்த இந்த திட்டம் தற்போது தமாதாவதாகவும் இந்த மாத கடைசிக்குள் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதாவது, வரும் மே 1 முதல் ஜிபிஎஸ் மூலமாக சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை அமலுக்கு வருகிறது. இதனால் டோல்களில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த திட்டத்தில் Geo Augumented Navigation (GAGAN) அமைப்பு GPS உதவியுடன் சேட்டிலைட் நேவிகேஷன் கொண்ட துல்லியமாக நீங்கள் பயணிக்கிற தூரத்தை கணக்கிட்டு அதற்கான சுங்க கட்டணத்தை நிர்ணயிக்கும்.

தற்போது உள்ளது போல எல்லோருக்கும் ஒரேபோலான கட்டணம் இல்லாமல் பயணிக்கிற தூரத்தை பொறுத்து கட்டணம் மாறும் எனவும் கூறப்படுகிறது. அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை உங்கள் டிஜிட்டல் வாலட்டில் இருந்து தானியங்கி முறையில் எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

GPS Toll Gate

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், சில நாள்களுக்கு முன் நாக்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (MoRTH) இந்த புதிய டோல் வசூல் முறையை அடுத்த 15 நாள்களில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஏற்கெனவே இருக்கும் ஃபாஸ்ட் டேக் திட்டத்துடனே இந்த திட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்ட டோல் லைன்களில் அமலில் இருக்கும். தேவை மற்றும் செயல்பாட்டுக்கேற்ப ஒட்டுமொத்த டோலுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

பெங்களூர்-மைசூர் மற்றும் பானிபட்- ஹிசார் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த திட்டம் தற்போது சோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.