முன்பெல்லாம் சிஎஸ்கே பேட்டிங் என்றால் ஒரு பயம் இருக்கும்.. ஆனால்! அம்பத்தி ராயுடு ஆதங்கம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது. 

நேற்று (ஏப்ரல் 20) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடியது. அந்த அணியின் மோசமான செயல்பாட்டிற்கு காரணம் என எதை கூறுவது? பேட்டிங், பவுலிங், ஃபில்டிங் என அனைத்துலுமே சொதப்பியது சென்னை அணி. குறிப்பாக பேட்டிங் நிலைமை சரியில்லை. தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங் வரிசையில் மாற்றங்களை செய்து வந்தனர். அப்படி இருந்தும் கூட பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. 

மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், சிவம் துபே மற்றும் ஜடேஜா சரியாக ஆடவில்லை என்றால் 176 கூட வந்திருக்காது. சரி டிஃபண்ட் செய்ய வேண்டிய ஸ்கோர் தான் என நினைத்தால், பந்து வீச்சிலும் கோட்டைவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடைசி வரை ஒரு விக்கெட்டை மட்டுமே சென்னை அணியால் வீழ்த்த முடிந்தது. போட்டியையும் மும்பை அணி 15.4 ஓவர்களில் முடித்தது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சிஎஸ்கே அணியின் பேட்டிங் குறித்து பேசி இருக்கிறார். 

அவர் பேசுகையில், இது அவரேஜான பேட்டிங் என்று கூட சொல்ல முடியாது, அதற்கும் கீழான பேட்டிங். மிடில் ஓவர்களில் ரன்களை குவிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஒரு சிங்கிளை எடுத்துவிட்டு அடுத்த பந்து ஈசியாக வருமா என எதிர்பார்க்கிறார்கள். இப்படி விளையாட முடியாது. அதிரடியான ஆட்டம் ஆட வேண்டும். அந்த மாதிரியான நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. 

ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் என்றாலே மற்ற அணியினருக்கு ஒரு பயம் இருக்கும். ஏனென்றால், அப்போது அதிக நோக்கத்துடன் சிஎஸ்கே அணி விளையாடியது. வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் முன்னேற வேண்டும். ஆனால் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டு வரும் என எனக்கு தோன்றவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

மேலும் படிங்க: இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

மேலும் படிங்க: ஆத்தாடி! ஐபிஎல் சியர் கேர்ள்ஸ்க்கு வழங்கப்படும் சம்பளம் இவ்வளவா? அதுவும் ஒரு மேட்ச்சுக்கு..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.