இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. பல்வேறு போட்டிகளை தனி ஒருவனாக வென்று கொடுத்துள்ளார். விராட் கோலி வந்ததற்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் ஏற்பட்டது. குறிப்பாக வீரர்கள் மத்தியில் பிட்னஸ் முக்கியமான ஒன்றாக மாறியது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வையை அறிவித்த போதிலும், ஐபிஎல் 2025ல் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தற்போது இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நீண்ட நாட்களாகவே விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியேற உள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு எதிர்கால நட்சத்திரம் கிடைத்துவிட்டார் – அனில் கும்ப்ளே
லண்டனில் குடியேறும் விராட் கோலி?
கடந்த 2024 ஆம் ஆண்டு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்போது இருந்து இவர்கள் அதிகமாக லண்டனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். விராட் கோலி சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி விரைவில் லண்டனில் குடியேற உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். “ஆம் விராட் கோலி தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார். இதற்கான வேலைகளையும் அவர் செய்து வருகிறார். தற்போது கிரிக்கெட்டை தாண்டி தனது குடும்பத்துடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார் விராட் கோலி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் கணவரும், டாக்டருமான ஸ்ரீராம் நேனேவும் இதனை உறுதிப்படுத்துகிறார். லண்டனுக்கு செல்வது பற்றி அனுஷ்கா சர்மா இவரிடம் கூறிய சில கருத்துக்களை தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா விரைவில் ஒட்டுமொத்தமாக லண்டனில் குடியேற உள்ளனர். இந்தியாவில் அவர்களால் சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியவில்லை. அவர்கள் எது செய்தாலும் அது மிகப்பெரிய செய்தியாக மாறுகிறது. நீண்ட நாட்களாக அவர்கள் தனிமையில் தான் உள்ளனர். மேலும் தங்களது குழந்தைகளை நல்லபடியாக அவர்கள் வளர்க்க விரும்புகின்றனர்” என்று டாக்டர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கோடிகளில் மட்டும் விளையாடி வரும் விராட் கோலி, அடுத்ததாக தனது இலக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பை என்று தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் யாரும் என்னை சிறிது காலத்திற்கு பார்க்க முடியாது என்றும் விராட் கோலி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிங்க: ப்ரீ ஹிட்டை மிஸ் செய்த கமிந்து, காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்