நடராஜன் ஏன் டீமில் இல்லை? கெவின் பீட்ர்சனின் பதிலால் கிளம்பிய சர்ச்சை!

தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜன். வேகப்பந்தில் தனது திறமையை வெளிக்காட்டி இந்திய அணியில் இடம் பிடித்தவர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் டெல்லி அணியில் இடம் பிடித்த அவரை பென்ஞ்சில் உற்கார வைத்துள்ளனர். 

கடந்த டிசம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் நடராஜனை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது. தனது யாக்கரால் எதிரணியை திணறடிக்கும் நடராஜன் டெல்லி அணியின் பிளேயிங் 11ல் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியோ அவரை பெஞ்ச்சில் உற்காரவைத்துள்ளது. முகேஷ் குமார் இடத்தில் அவரை ஆட வைக்கலாம் என பலரும் கேள்வி எழுப்பி வரும் அதேசமயம் அவரை டெல்லி அணிக்கு பயன்படுத்த தெரியவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடராஜன் குறித்த கேள்விக்கு அந்த அணியின் மெண்டாரான கெவின் பீட்டர்சன் பதிலளித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது. இலக்கு குறைவாக இருந்தாலும், டெல்லி அணி தனது சிறப்பான பீல்டிங் மூலம் 3 விக்கெட்களை வீழ்த்தியது. ஆனால் அதையடுத்து குர்னால் பாண்டியா மற்றும் விராட் கோலி பெங்களூரு அணியை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றனர். இவர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர். இவர்களை டெல்லி அணியால் ஒன்றுமே செய்யவில்லை. இருப்பினும் டெல்லி அணியின் பக்கமும் போட்டி இருந்தது. 

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். ஆனால் கட்டுப்படுத்தாமல் ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவர் வரை செல்ல வேண்டிய போட்டியை 19வது ஓவரிலேயே முடிக்க செய்துவிட்டார். இதுபோன்ற காரணங்களால் டெல்லி அணி கடைசி 5 போட்டிகளில் வெறும் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

இந்த நிலையிலும், கெவின் பீட்டர்சன் நடராஜனை பிளேயிங் 11ல் தேர்வு செய்ய முடியவில்லை. எந்த இடத்தில் தேர்வு செய்வது என்பதை நீங்களே சொல்லுங்கள் என பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் கேள்வி கேட்டுள்ளார். இது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. முகேஷ் குமார் மற்றும் சமீராவுக்கு பதிலாக நடராஜனை அணியில் கொண்டு வரலாம் என கூறி வருகின்றனர்.  

மேலும் படிங்க: சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?

மேலும் படிங்க: CSK பிளே ஆப் போக ‘மேஜிக்’ நடக்கணும்… அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.