காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தான் 6-வது நாளாக மீறல் – இந்திய ராணுவம் பதிலடி!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரம் இரு நாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லையில் பாகிஸ்தான் 6-வது நாளாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவ தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

ஜம்மு – காஷ்மீரின் உரி, நவு​கம், ராம்​பூர், கெரன், குப்​வா​ரா, பூஞ்ச் உள்​ளிட்ட எல்​லைப் பகு​தி​களில் கடந்த 6 நாட்​களாக இந்​திய, பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு இடையே கடும் துப்​பாக்​கிச் சண்டை நடை​பெற்று வரு​கிறது.

‘பாகிஸ்தான் ராணுவ நிலைகளில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை துப்பாக்கிச் சூடு நீடித்தது. ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது’ என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்​திய, பாகிஸ்​தான் எல்​லை​யில் தொடர்ந்து அசா​தாரண சூழ்​நிலை நில​வு​கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக எல்​லைப் பகுதி மக்​கள் பதுங்கு குழிகளை அமைத்​துள்​ளனர். பல்​வேறு கிராமங்​களில் ராணுவத்​தின் உதவி​யுடன் மிகப் ​பெரிய ரகசிய பதுங்கு அறை​கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதுங்கு அறை​களில் சமையலறை, கழிப்​பறை, படுக்கை வசதி, பிரிட்ஜ் உள்​ளிட்ட அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. ஒரு மாதத்​துக்​கு தேவை​யான மளி​கைப் பொருட்​களும் சேகரித்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

போர்ப் பதற்றம் அதிகரிப்பு: கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலாப் பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் அந்​நாட்டு உளவுத் துறை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இதனால் இரு நாடு​களிடையே போர் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

இந்தச் சூழலில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கான், ராணுவ தளபதி உபேந்​திர திவிவே​தி, கடற்​படை தளபதி தினேஷ் கே.​திரி​பா​தி, விமானப்​படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்​லி​யில் நேற்று பிரதமர் நரேந்​திர மோடியை சந்​தித்​தனர். பிரதமரின் இல்​லத்​தில் சுமார் 90 நிமிடங்​கள் முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

அப்​போது, பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக​வும், அதற்கு தக்க பதிலடி கொடுப்​பது குறித்​தும் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி பேசும்​போது, “தீ​விர​வாதத்தை வேரறுக்க வேண்​டும். பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்​டும்.

எவ்​வாறு தாக்​குதல் நடத்​து​வது, எந்த இடங்​களில் தாக்​குதல் நடத்த வேண்​டும், எப்​போது தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதை பாது​காப்​புப் படைகளே முடிவு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் முப்​படைகளும் சுதந்​திர​மாக செயல்​படலாம்” என்று தெரிவித்தார்​.

ஜம்மு காஷ்மீர் பகு​தி​யில் இந்​திய ராணுவ​மும், மத்​திய ஆயுத போலீஸ் படை​யும் நேற்று போர் பயிற்​சி​யில் ஈடு​பட்​டன. இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. மேலும், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்​லைப் பகு​தியை சேர்ந்த கிராம மக்​களுக்கு ராணுவம் சார்​பில் நேற்று சிறப்பு பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டன.

காஷ்மீரின் ஜம்மு பகு​தி​யில் தேசிய பாது​காப்பு படை (என்​எஸ்​ஜி) கமாண்​டோக்​கள், மாநில போலீ​ஸார் இணைந்து பாது​காப்பு ஒத்​தி​கையை நடத்​தினர். ஜம்மு பகு​தி​யில் உள்ள இந்து கோயில்​களில் இந்த ஒத்​திகை நடத்​தப்​பட்​டது. மேலும், ராணுவம் தரப்​பில் காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று என்​க​வுன்ட்​டர்​கள் நடத்​தப்​பட்​டன. இதுகுறித்த தகவல்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

ஜம்மு காஷ்மீரில் மீண்​டும் தீவிர​வாத தாக்​குதல் நடத்த தீவிர​வாத அமைப்​பு​கள் சதித் திட்​டம் தீட்​டி​யிருப்​ப​தாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்​துள்​ளது. இதையடுத்​து, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக காஷ்மீரில் 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.