கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரை சேர்ந்த தாத்தா, 2 பேரக் குழந்தைகள் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்​டம் உப்​பிடமங்​கலத்தை அடுத்த ஜோதிவடத்​தைச் சேர்ந்​தவர் பிரபு(40). கற்​றாழையை கொண்டு மதிப்​புக்​கூட்​டப்​பட்ட பொருட்​கள் தயாரித்​து, நாடு முழு​வதும் விற்​பனை செய்து வரு​கிறார். இவரது மனைவி மது​மி​தா, மகள் தியா(10), மகன் ரிதன்​(3).

இந்​நிலை​யில், பிரபு, மனைவி மது​மி​தா, குழந்​தைகள், மாம​னார் முத்​து கிருஷ்ணன்​(61) ஆகியோ​ருடன் ஏப். 17-ம் தேதி கொல்​கத்​தாவுக்கு சுற்​றுலா சென்​றார். அங்கு படா பஜார் ரபிந்​தரசரணி பகு​தி​யில் 5 தளங்​கள் கொண்ட ஹோட்​டலில் குடும்​பத்​தினர் அனை​வரும் தங்​கி​யிருந்​தனர்.

இந்நிலையில், இரவு உணவு வாங்​கு​ வதற்​காக பிரபு​வும், அவரது மனை​வி​யும் வெளியே சென்​றுள்​ளனர். அந்​நேரத்​தில் மின் கசிவு காரண​மாக ஓட்டலில் தீ விபத்து ஏற்​பட்டு 14 பேர் உயிரிழந்​தனர். இதில் முத்​துகிருஷ்ணன், அவரது பேரக் குழந்​தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் உயி​ரிழந்​தனர்.

முதல்​வர் இரங்​கல்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில், “கொல்​கத்தா தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​வதுடன், அவர்​களது குடும்​பத்​தினருக்கு அரசு துணை நிற்​கும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.