Airtel Recharge Plan: நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், சுமார் 38 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ஏர்டெல் பல வகையான திட்டங்களை வெளியிட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஏர்டெல் அதன் ரீசார்ஜ் திட்டங்களை வெவ்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அந்த வகையில் நீங்கள் இப்போது நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்த ரீசார்ஜ் திட்டத்தின் அம்சம் என்னவென்றால் மூன்று மாதங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் திட்டத்தைப் பற்றிய முழு தகவலை இங்கே பெறலாம்.
ஏர்டெல்லின் ரூ.929 ரீசார்ஜ் திட்டம் | Airtel’s Rs 929 recharge plan:
ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டமானது ரூ.929 ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தை ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உள்ள ட்ரூலி அன்லிமிடெட் பிரிவில் காணலாம். இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டியுடம் வருகிறது. இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜை செய்வதன் மூலம், மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. அதாவது அடிக்கடி ரீசார்ஜ் இமிசையில் இருந்து விடுப்படலாம். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் நீங்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற இலவச அழைப்பைப் பெறுவீர்கள், அதாவது எந்த தடங்கலும் இல்லமல் பேசிக்கொண்டே இருக்கலாம்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் உடன், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். தரவைப் பற்றிப் பேசுகையில், இந்தத் திட்டம் 90 நாட்களுக்கு மொத்தம் 135 ஜிபி தரவை நீங்கள் பெறுவீர்கள். இதன் சரியான அற்தம் என்னவென்றால் ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம், எனவே இணையத்தில் தடங்கல் இல்லாமல் அணுகலாம். எனவே ஏர்டெல் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.
ஏர்டெல்லின் 84 நாள் திட்டம்:
ஏர்டெல்லின் பல திட்டங்கள் 84 நாட்கள் நீண்ட செல்லுபடியை வழங்குகின்றன. ஆனால் மலிவான விலை ரூ.859 திட்டமாகும். இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதன்படி மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.