நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 15 லீக் ஆட்டங்களுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய மூன்று அணிகளை தவிர்த்து மீதமுள்ள 7 அணிகளும் தற்போது வரை பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
தற்போதைய நிலவரபடி புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்திலும் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளது. இந்த அணியை தொட்ர்ந்து டெல்லி, கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கும் செல்லப்போகும் அணிகள் குறித்து தங்களது கணிப்புகளை முன்னாள் வீரர்கள் கணித்துள்ளார்கள். அதன்படி அணில் கும்ப்ளே, மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என கணித்துள்ளார். இதுபோன்று முகமது கைஃப் வெளியிட்டுள்ள கணிப்பில், பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என கூறி உள்ளார்.
முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வெளியிட்டுள்ள கணிப்பில், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆஃப்புக்கு செல்லும் என கூறியுள்ளார். இதேபோன்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்குமார்சிபி அணியை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: CSK ஓபனிங்கில் பெரிய மாற்றம்…? கேகேஆர் நாக்அவுட் செய்ய சூப்பர் வாய்ப்பு!
மேலும் படிங்க: ஐபிஎல் Fraud டீம்: இடம்பிடித்த 5 சிஎஸ்கே வீரர்கள்.. கேப்டனாக ரிஷப் பண்ட்!