பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் பா.ஜ.க.வில் இருந்த ஜனார்த்தன ரெட்டி, 2008-ல் எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். அவர் கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டபின் பா.ஜ.க.வுடனான தொடர்பில் இருந்து […]
