வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – முதல்வர் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: சென்னை சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் தங்கி வேதம் பயின்று வந்த விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த வீரராகவன் (24), சென்னை, அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்த சிறுவன் வெங்கட்ராமன் (17) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சேர்ந்த சிறுவன் ஹரிகரன் (16) ஆகிய மூவரும் திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்துக்கு சென்றிருந்த நிலையில் இன்று (மே 6) காலை சுமார் 6.30 மணியளவில் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.