இன்டர்வியூ என்று சொன்னாலே பலருக்கும் படபடப்பு வந்துவிடும்.
‘என்ன கேள்வி கேட்பார்கள்?’, ‘வேலை கிடைக்குமா… கிடைக்காதா?’ போன்ற சந்தேகங்களிலேயே இன்டர்வியூவில் பல சொதப்பல்கள் நடந்துவிடும்.
பல பதில்களைப் பதறி உளறிவிடுவோம். அப்படிச் சொல்லக்கூடாத 10 விஷயங்களைப் பார்க்கலாம்… வாங்க…
1. எனக்கு எந்தப் பலவீனமும் கிடையாது
உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பலவீனம் கண்டிப்பாக இருக்கும். அதனால், ‘எந்தப் பலவீனமும் இல்லை’ என்று கூறுவது பொய்யிலும் பொய் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும்.
இந்தக் கேள்விக்கு, ‘நான் இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கிறேன்’ என்று பாசிட்டிவாக பதில் சொல்லுங்கள்.
2. என்னைப் பழைய ஆபீஸில் இருந்து லே ஆஃப் செய்துவிட்டார்கள்
ஒருவேளை, உங்களைப் பழைய நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தால், அதைக் குறித்து கூறி, அந்த நிறுவனத்தைக் குறைகூறாதீர்கள்.
நீங்கள் அந்த நிறுவனத்தில் என்னென்ன செய்தீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அந்த நிறுவனம் உங்கள் வளர்ச்சிக்கு எப்படி வித்திட்டது என்பதைக் குறிப்பிட்டுப் பேசுங்கள். இது உங்கள் மீது நல்ல பிம்பத்தை உருவாக்க உதவும்.

3. எல்லாம் ரெஸ்யூமில் இருக்கிறது
எதாவது கேள்வி கேட்கப்பட்டால், இந்தப் பதிலைச் சொல்லாதீர்கள். ரெஸ்யூமில் இருப்பதைவிட, உங்களது திறன்களை நீங்கள்தான் இன்னும் தெளிவாக விளக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
4. உங்கள் கம்பெனி என்ன செய்கிறது?
ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றி நீங்கள்தான் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, அவர்களது நிறுவனத்தைப் பற்றி அவர்களிடமே கேட்டால், அது உங்களுக்கு மிகப்பெரிய நெகட்டிவாக அமைந்துவிடும்.
5. எனக்கு எந்தக் கேள்வியும் இல்லை
இது உங்களுக்கு அந்த வேலையில் எந்த ஆர்வமும் இல்லை என்பதுபோல காட்டும்.
அதனால், ‘என்னுடைய டீம் பற்றிச் சொல்லுங்கள்?’, ‘நான் இந்த ரோலில் என்ன பெரிய சவாலைச் சந்திக்கக்கூடும்?’ போன்ற கேள்விகளைக் கேட்டு ஸ்கோர் செய்யுங்கள்.
6. உங்களுடைய பழைய மேனேஜர் மிகவும் மோசமானவர்
உங்களுடைய பழைய மேனேஜர் குறித்தோ, பழைய நிறுவனத்தைக் குறித்தோ குறைகூறாதீர்கள்.
‘நம்மைப் பற்றியும் இப்படித்தான் பேசுவார்கள்’ என்று புதிய நிறுவனம் நினைக்கக்கூடும்.

7. என்னிடம் இந்தத் திறன் இருக்கிறது… அந்தத் திறன் இருக்கிறது
உங்களிடம் இல்லாத திறன் குறித்து அளந்துவிடாதீர்கள். அப்போது மாட்டவில்லை என்றாலும், பின்னாளில் மாட்டக்கூடும்.
8. எனக்குத் தெரியவில்லை
அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களுக்குப் பதில் தெரியவில்லை என்றால், அதுகுறித்து தெரிந்த தகவல்களைச் சொல்லுங்கள் அல்லது ‘நான் இது குறித்துக் கற்றுக்கொள்கிறேன்’ என்று பதிலளியுங்கள்.
9. என்னுடைய சம்பளம் எவ்வளவு… இவ்வளவு வேண்டும்
எடுத்தவுடனேயே சம்பளத்தைப் பற்றிப் பேசாதீர்கள். இது உங்களுக்குப் பணியைவிட, பணத்தில்தான் ஆர்வம் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கும்.
10. பர்சனல் பக்கங்கள்
நீங்கள் சென்றிருப்பது உங்கள் பணிக்கான நேர்காணலுக்கு. அதனால், அங்கே தேவையில்லாமல் உங்கள் தனிப்பட்ட விஷயங்களை அதிகம் பேசாதீர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs