நாஜி படைகளுடனான மோதலில் ரஷ்யாவின் வெற்றி தின கொண்டாட்டம்: உலக தலைவர்கள் பங்கேற்பு

மாஸ்கோ: ரஷ்யா​வில் நேற்று நடை​பெற்ற வெற்றி தின பேரணி​யில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட உலக தலை​வர்​கள் கலந்து கொண்​டனர். நாஜி ஜெர்​மனி படைகளை வெற்றி கொண்​டதை குறிக்​கும் 80 ஆண்டு தினத்​தையொட்டி ரஷ்யாவில் மாபெரும் வெற்றி தின பேரணிக்கு நேற்று ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. இதில், உக்​ரைனில் போரிடும் ரஷ்ய படைகளு​டன், சீன படைகளும் இணைந்து அணிவகுப்பு மேற்​கொண்​டன.

இந்த ஆண்டு ரஷ்ய வெற்றி தின அணிவகுப்​பில் 2015-ம் ஆண்​டுக்​குப் பிறகு அதிக எண்​ணிக்​கையி​லான வெளி​நாட்​டுத் தலைவர்கள் கலந்து கொண்​டனர். சீனா, பிரேசில், ஸ்லோவேக்​கி​யா, செர்​பியா உட்பட 27 உலக நாடு​களின் தலை​வர்​கள் இந்த வெற்றி தின விழா​வில் பங்​கேற்​றனர்.

உக்​ரைனில் நான்கு ஆண்​டு​கள் போர் நீடித்து வந்​தா​லும் ரஷ்யா உலக அரங்​கி​லிருந்து தனிமைப்​படுத்​தப்​பட​வில்லை என்​ப​தற்கு சான்​றாக வெளி​நாட்டு தலை​வர்​களின் வருகை அமைந்​திருந்​தது. 2022-ம் ஆண்டு உக்​ரைன் மீதான தாக்​குதல் முழு அளவி​லான போ​ராக மாறியதற்​குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மிக நீண்ட உரையை ஆற்​றி​னார்.

அப்​போது அவர் கூறுகை​யில், “நாஜி படை​யினரின் மிக கொடூர​மான, இரக்​கமற்ற தாக்​குதல்​களை சோ​வி​யத் யூனியன் எதிர்​கொண்​டது. உக்​ரைன் மீதான படையெடுப்​பில் உண்​மை​யும், நீதி​யும் நம் பக்​கம் உள்​ளன’’ என்​றார். மியான்​மர், பர்​கினா பாசோ​வின்ராணுவ ஆட்​சிக்​குழுக்​களின் தலை​வர்​களும் இந்த வெற்​றி தின​விழா​வில்​ பங்​கேற்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.