விராட் கோலி ஓய்வு.. சச்சின் டெண்டுல்கர் உருக்கம்! என்ன சொன்னார்?

ஐபில் போட்டிகளுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயனத்தில் 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இச்சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவரை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் மற்றும் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவர்களின் ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியின் ஓய்வு குறித்து உணர்ச்சிமிக்க ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தற்போது நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. 

உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளித்தீர்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் எதோ செய்துவிட்டது. நான் அதை பத்திரமாக வைத்திருக்கின்றேன். நீங்கள் அன்று காட்டிய அன்பு என் வாழ்நாளில் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது என்னிடம் உங்களுக்கு திருப்பி பரிசளிக்க கயிறு எதுவும் இல்லை. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 

நீங்கள் நமது இளைஞர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் அழைத்து வந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டை ஒரு தொழில் முறை விளையாட்டாக எடுத்துக் கொள்ள பலரும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம். உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பல உச்சங்களை தொட்டு இருக்கின்றது.

வெறும் ரன்களை மட்டுமல்லாமல் அதற்கு மேல் பல விஷயங்களை இந்த இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். பல புதிய தலைமுறையினரை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும். உங்களுடைய ஸ்பெஷலான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக கூறி உள்ளார். 

மேலும் படிங்க: விராட் கோலியின் இடம் யாருக்கு…? போட்டிப்போடும் 5 வீரர்கள்!

மேலும் படிங்க: ‘தேவ தூதன்’ விராட் கோலி ஓய்வு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு – ஏன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.