ஐபிஎல்லின் புதிய விதி! ஆயுஷ், ப்ரீவிஸ் அடுத்த ஆண்டு சிஎஸ்கேவில் விளையாட முடியுமா?

மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் மீதமுள்ள அணிகள் போட்டி போட்டு வந்தனர். இன்னும் இந்த தொடர் முடிய சில போட்டிகளே இருந்தாலும் இதுவரை எந்த ஒரு அணியும் பிளே ஆப் வாய்ப்பை எட்டவில்லை. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தலாம். மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ அணிக்கு பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.

மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இரு நாடுகளும் அமைதிப் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளது. ஐபிஎல் இறுதி போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் அதற்குள் சர்வதேச போட்டிகள் தொடங்க உள்ளதால் சில நாட்டு வீரர்கள் பிளே ஆப் போட்டிகளுக்கு இருக்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளை சேர்ந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள். இதன் காரணமாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஐபிஎல் அணிகள் உள்ளது.

இருப்பினும் ஐபிஎல் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய உடன் மாற்று வீரர்களாக அறிவிக்கப்படும் வீரர்களை எந்த ஒரு அணியும் அடுத்த ஆண்டு தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதாரணமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கு பதிலாக முஸ்தாபிசுர் ரஹ்மானை மாற்று வீரராக அறிவித்துள்ளது. அவர் இந்த வருடம் நடக்கும் போட்டிகளில் மட்டுமே டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாட முடியும். அடுத்த ஆண்டு அவரை ஏலத்தில் தான் மீண்டும் எடுக்க வேண்டும்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த பாதிப்பு இல்லை. சென்னை அணியில் இருந்த ருதுராஜ், வன்ஷி பேடி போன்ற வீரர்கள் ஐபிஎல் நிறுத்தப்படும் முன்பே காயம் காரணமாக தொடரை விட்டு வெளியேறினர். இவர்களுக்கு பதிலாக அணியில் இணைந்த ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல் போன்ற வீரர்கள் அடுத்த ஆண்டு சென்னை அணியில் விளையாடலாம், இதற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். என்னதான் இந்த ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை இழந்திருந்தாலும் இந்த வீரர்கள் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மேலும் படிங்க: இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.