பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமானம், ஐபிஎல் தொடரில் இணைந்த வெளிநாட்டு பிளேயர்

IPL 2025 Latest News : பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இப்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு நடத்தி வரும் பிஎஸ்எல் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் ஓவன், இப்போது அந்த தொடரில் இருந்து விலகி இந்தியாவில் IPL தொடரில் விளையாட வந்துள்ளார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி எஞ்சிய போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து பிளேயர் கிளென் பிலிப்ஸ் இனி பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட தன் வாழ்நாளில் செல்லமாட்டேன் என அறிவித்த இப்போது இன்னொரு கிரிக்கெட் பிளேயரும் பிஎஸ்எல் லீக்கில் இருந்து விலகியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு உலகளவில் ஏற்பட்ட அவமானமாக பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல், பிஎஸ்எல் ரத்து

இந்தியா – பாகிஸ்தான் இடையே எழுந்த போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. அனைத்து அணி பிளேயர்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கும், சொந்த நாட்டுக்கும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதேநேரத்தில் பாகிஸ்தானில் நடந்த பிஎஸ்எல் லீக் போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தொடரில் பங்கேற்று விளையாடிய வெளிநாட்டு பிளேயர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப சம்பந்தப்பட்ட அணிகள் உரிய வசதியை செய்து கொடுக்கவில்லை. இதனால் பல பிளேயர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இனி பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் பிஎஸ்எல் லீக் போட்டியில் விளையாட மாட்டோம் என அறிவித்தனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம்

இந்த சூழலில் பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவனை பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஓவன் 3 கோடி ரூபாய் விலையில் அந்த அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். ஆனால், பிஎஸ்எல் கிரிக்கெட்போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இதேபோல் பல வெளிநாட்டு கிரிக்கெட் பிளேயர்களும் பாகிஸ்தானுக்கு மீண்டும் செல்ல  மறுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் பிஎஸ்எல் லீக் போட்டி பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. 

மிட்செல் ஓவன் யார்?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் மின்செல் ஓவன் அந்நாட்டில் நடக்கும் பிக்பாஸ் கிரிக்கெட லீக் போட்டியில் ஹரிக்கேன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அந்த அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லவும் இவர் காரணமாக இருந்தார். 39 பந்துகளில் சதமடித்த ஓவன், 189 ரன்கள் இலக்கை 35 பந்துகள் மீதம் வைத்து ஹரிகேன்ஸ் அணி சேஸிங் செய்ய பெரும் பங்காற்றினார். இதன்மூலம் ஹரிக்கேன்ஸ் முதன்முறையாக பிக்பாஸ் லீக் போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. 

பஞ்சாப் கிங்ஸ் அடுத்த போட்டி

இப்போது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, மே 18 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடுகிறது. 

மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

மேலும் படிங்க: விராட் கோலி ஓய்வுக்கு காரணமே பிசிசிஐ தான் – முகமது கைப் பரபரப்பு குற்றச்சாட்டு

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.