மணிப்பூர் துப்பாக்கி சண்டையில் 10 தீவிரவாதிகள் உயிரிழப்பு: 7 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டத்​தில் அசாம் ரைபிள்ஸ் படை​யுடன் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் ராணுவத்​தின் கிழக்கு படைப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தியா – மியான்​மர் எல்​லைக்கு அரு​கில், மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டம், நியூ சாம்​தால் கிராமத்​தில் ஆயுதமேந்​திய நபர்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக புதன்​கிழமை உளவுத் தகவல்​கள் கிடைத்​தன. இதன் அடிப்​படை​யில் அசாம் ரைபிள்ஸ் படை​யினர் அங்கு விரைந்து சென்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

இதில் ஏற்​பட்ட துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். சம்பவ இடத்​தில் இருந்து கணிச​மான அளவு ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன” என்று தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக கொஹி​மா​வில் உள்ள ராணுவ செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “அங்கு ராணுவ நடவடிக்கை தொடர்​கிறது. அது முடிவுக்கு வந்​தவுடன் அது தொடர்​பான தகவல்​கள் பகிர்ந்து கொள்​ளப்​படும்” என்​றார். இதற்​கிடை​யில் மணிப்​பூரில் பல்​வேறு அமைப்​பு​களை சேர்ந்த 7 தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​தாக போலீ​ஸார் நேற்று தெரி​வித்​தனர்.

தவு​பால், காக்​சிங், விஷ்ணுபூர். சூரசந்த்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் இவர்​கள் கடந்த செவ்​வாய் மற்​றும் புதன்​கிழமை கைது செய்யப்​பட்​ட​தாக போலீ​ஸார் கூறினர். இவர்​களிடம் இருந்து துப்​பாக்​கி​கள் மற்​றும் தோட்​டாக்​களை போலீ​ஸார்​ பறி​முதல்​ செய்துள்ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.