டொவினோ தாமஸ் நடித்திருக்கும் ‘நரிவேட்டை’ திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் நடிகராக மலையாளத்தில் அறிமுகமாகிறார் நடிகர் சேரன்.
படத்தில் ஒரு காவல் அதிகாரி கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் இன்றுவரை ஒரு கல்ட் படமாக பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

இத்திரைப்படம் கூடிய விரைவில் ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரீ ரிலீஸையொட்டி சமீபத்தில் ஏ.ஐ உதவியுடன் ஒரு டிரெய்லரையும் தயார் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
‘நரிவேட்டை’ திரைப்படத்திற்காக அவரை சந்தித்துப் பேசுகையில் ‘ஆட்டோகிராஃப்’ ரீ ரிலீஸ் பற்றியும் பேசினோம்.
20 நிமிடம் நானே கட் பண்ணியிருக்கேன்!
பேச தொடங்கிய சேரன், “2K கிட்ஸை கவர் பண்ணுவதற்கு ஆகத்தான் அந்த AI டிரைலர் பயன்படுத்தியிருந்தோம். அப்போதான் அவங்க எதிர்பார்த்து வருவாங்க.
ஆனா, அன்றைக்கு கொடுத்த பொறுமையை நான் இன்றைக்கு எதிர்பார்க்க முடியாது.
அன்றைக்கு அந்தப் படம் 2 மணி நேரம் 50 நிமிடம் இருந்தது. இப்ப அதில் 20 நிமிடம் நானே கட் பண்ணியிருக்கேன்.
எனக்கே இன்றைக்கு பார்த்து இது க்ரிஞ்ச், இது பூமர் அப்படியெல்லாம் தோணும். ரியாலிட்டியை நாம ஏக்ஸெப்ட் பண்ணிக்கணும்.

ஏன்னா, அன்றைக்கு டேஸ்டுக்கு அது தெரியாது. ஆனா, இன்றைக்கு எனக்கே என்னை பார்க்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணியிருக்கோமோன்னு தோணுது.
அதனால் அதில் எதெல்லாம் வேண்டாமோ அதெல்லாம் கட் பண்ணிட்டேன். அப்புறம் இன்றைக்கு சவுண்டு வேற மாதிரி இருக்கு. 2004-ல நாம கேட்ட சவுண்டு இப்போ ரொம்ப பழசா தெரியும்.
ரீ-வொர்க் பண்ணியிருக்கேன்!
அப்போ இந்த சவுண்டை நாம வேறாக கொடுக்கணும்னு நான் ‘ஆட்டோகிராஃப்’ ரீரெக்கார்டிங்கில் மொத்த சவுண்டு செட்டப்பையும் நான் ரீ-வொர்க் பண்ணியிருக்கேன்.
இன்னைக்குள்ள படங்கள் எப்படி வருதோ அந்த டெக்னாலஜியையும் கொடுத்திருக்கேன். முதலில் வந்தது ஃபில்ம். இப்ப அதை ரீஸ்டோரேஷன் பண்ணிட்டு அதை டிஐ பண்ணும் போது ஃபுல் கலர் டோன் மாத்தியிருக்கேன்.

ஒவ்வொரு போர்ஷன்களுக்கு வேற வேற டோனாக மாத்தியிருக்கேன். இவ்வளவு சிரத்தைக் கொடுத்து உழைக்கிறதுக்கு காரணம் இன்றைக்கு இருக்கிற ஆடியன்ஸ் முட்டாள் இல்ல.
அவன் ரொம்ப புத்திசாலி. அவனை ஏமாற்றினால் அவனுக்குப் பிடிக்காது. அதனால் அவனுக்கான பொறுப்போட நம்ம ஒரு படம் கொடுக்கணும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்!” எனக் கூறியிருக்கிறார்.